
Hadith #1001
Tamil (தமிழ்)இறைத்தூதர் முஹம்மது நபி ﷺ அவர்களின் வமிசப் பரம்பரை. அத்னானின் மகன் மஅத்தும், மஅத்துடைய மகன் நிஸாரும், நிஸாருடைய மகன் முளரும் முளருடைய மகன் இல்யாஸும், இல்யாஸுடைய மகன் முத்ரிகாவும், முத்ரிகாவின் மகன் குஸைமாவும், குஸைமாவின் மகன் கினானாவும், கினானாவின் மகன் நள்ரும்,நள்ரின் மகன் மாலிக்கும், மாலிக்கின் மகன் ஃபிஹ்ரும், ஃபிஹ்ரின் மகன் ஃகா-பும், ஃகா-பின் மகன் லுஅய்யும், லுஅய்யின் மகன் கஅபும், கஅபின் மகன் முர்ராவும், முர்ராவின் மகன் கிலாபும், கிலாபின் மகன் குஸய்யும், குஸய்யின் மகன் அப்து மனாஃபும், அப்து மனாஃபின் மகன் ஹாஷிமும், ஹாஷிமின் மகன் அப்துல் முத்தலிபும், அப்துல் முத்தலிபின் மகன் அப்துல்லாஹ்வும், அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ﷺ அவர்களும் ஆவார்கள். (ஸஹீஹுல் புஹாரி) நபி ﷺ அன்னவர்களின் வமிசப் பரம்பரையில் 'அத்னான்' வரையில் எவ்விதக் கருத்து வேற்றுமையும் இல்லை. எனினும் அத்னானிலிருந்து வரலாற்றாசிரியர்கள் கருத்து வேற்றுமை படுகின்றனர்.
Reference: (صحيح البخاري، كتاب مناقب الأنصار، باب مبعث النبي صلى الله عليه وسلم)